சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கண்ணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் கவிதாராமு குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் நேற்று அவரிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் கண்ணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story