கேட்பாரற்று கிடந்த 700 கிலோ ரேஷன் அரிசி
சிவகாசி அருகே 700 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது.
சிவகாசி,
சிவகாசி அருகே 700 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது.
ரேஷன் அரிசி
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் இருந்து சிலர் மொத்தமாக ரேஷன் அரிசிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு கடத்தி வந்தனர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ரேஷன் கடைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவகாசி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ஜெய பாண்டியன் நேற்று பள்ளப்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
700 கிலோ அரிசி பறிமுதல்
அப்போது ஒரு இடத்தில் 14 பாலித்தீன் பைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதை யார் கடத்தி வந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டதாக தாசில்தார் ராஜ்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story