சரவண பொய்கையில் குளித்த அய்யப்ப பக்தர் சாவு
திருப்பரங்குன்றத்தில் சரவண பொய்கையில் குளித்த அய்யப்ப பக்தர் இறந்தார்.
திருப்பரங்குன்றம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் சுவாமி அய்யப்பனுக்கு துளசி மாலை அணிந்து இருந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் சக அய்யப்ப பக்தர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அப்போது சரவண பொய்கையில் குளித்தார். அதில் தடுமாறி படிக்கட்டின் கல்லில் அவர் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார். உடனே மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆறுமுகத்தை கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story