100 சதவீதம் உழைப்பை கொடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம்
100 சதவீதம் உழைப்பை கொடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடக்க விழாவில் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.
தஞ்சாவூர்:
100 சதவீதம் உழைப்பை கொடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடக்க விழாவில் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.
சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி
தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள தீன் காம்ப்ளக்சில் சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அகாடமி நிறுவனர் பால.சிவா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி மோகன்குமார் வரவேற்றார்.
விழாவில் சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். உங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். போட்டித்தேர்வு எழுதுவது மேற்படிப்பு போன்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.
100 சதவீதம் உழைப்பு
முதலில் நீங்கள் உங்களை திருப்தி படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எதிர்மறை சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். 100 சதவீதம் நீங்கள் உழைப்பை கொடுத்தால் எளிதில் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவச கையேடு
விழாவில் தஞ்சை பயிற்சி கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து பேசினார். விழாவில் பாரத் கல்லூரி செயலாளர் புனிதாகணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப் 1, 2 அதிகாரிகள் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. குரூப் 1, 2 முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சியில் சேருபவர்களுக்கு பாடத்திட்டமும், வினாத்தாளும் இலவசமாக வழங்கப்படுகிறது. வகுப்புகள் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேலும் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடு வழங்கப்பட்டது. மாணவர்கள் 9840119927, 04362-232425 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று நிறுவனர் பால.சிவா தெரிவித்தார்.
Related Tags :
Next Story