எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 1:52 AM IST (Updated: 20 Dec 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடையநல்லூர்:
தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார், செயலாளர்கள் சர்தார், அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன், மாநில வர்த்தக அணி செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, பாப்புலர் பிரண்ட் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில செயலாளர் ஷான் படுகொலையை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிக்கந்தர் ஒலி, இம்ரான்கான், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், செயற்குழு உறுப்பினர் ஹக்கீம், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் சினா, ஷேக் முஹம்மது ஒலி, ஜார்ஜ், கடையநல்லூர் நகர தலைவர் அன்னக்கிளி சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மைதீன் காதர் நன்றி கூறினார்.

Next Story