பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது


பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது
x
தினத்தந்தி 20 Dec 2021 1:54 AM IST (Updated: 20 Dec 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்று தஞ்சை கோட்ட அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்:
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்று தஞ்சை கோட்ட அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கோட்ட மாநாடு
அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்க தஞ்சை கோட்ட 36-வது மாநாடு தஞ்சை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் வீராசாமி முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பஞ்சநாதன் வரவேற்றார். மாநாட்டில் புதுக்கோட்டை கோட்ட தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, தஞ்சை தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாஸ், துணை தலைவர் குழந்தைராஜ், தபால் ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் ஜெயராஜன், மண்டல செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கைவிட வேண்டும்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாநாட்டில் தஞ்சை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Next Story