மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு


மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 2:04 AM IST (Updated: 20 Dec 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. பெரும்பாலான நாட்களில் 15-க்குள்ளாகவும், சில நாட்களில் 20-க்கு மேலாகவும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் 2020 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தங்கோடு, நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், திருவட்டார் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும், மேல்புறம், தக்கலை வட்டார பகுதிகளில் தலா 2 பேரும் என மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆண்கள் 5 பேர், பெண்கள் 4 பேர், ஒரு ஆண் குழந்தை ஆகியோர் அடங்குவர். இவர்களோடு சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது.

Next Story