பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் திருமணம் செய்தவர் தற்கொலை-மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் திருமணம் செய்தவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிரிந்து சென்றதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் திருமணம் செய்தவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிரிந்து சென்றதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
வாழப்பாடி அருகே குறிச்சி ரெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாத் (வயது 23). பேளூர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே தன்னுடைய காதல் மனைவியுடன், பிரபாத்துக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே வேதனை அடைந்த திவ்யா, தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
தற்கொலை
காதல் மனைவி பிரிந்து சென்றதால் பிரபாத் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர் தன்னுடைய மனைவியை அழைத்து வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் பேளூர் செல்லாமல், பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி சின்னாறு பாலம் பகுதியில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பிரபாத்தை, ஏத்தாப்பூர் போலீசார் அரசு ஆஸ்பத்தி்ரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story