சேலம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு நோய் தொற்று: கொரோனாவுக்கு முதியவர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார். மேலும் புதிதாக 34 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 34 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 10 பேர், ஓமலூரில் 4 பேர், பனமரத்துப்பட்டியில் 3 பேர், கொங்கணாபுரம் மற்றும் வீரபாண்டியில் தலா 2 பேர், சங்ககிரி, தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேருக்கும், ஈரோடு மற்றும் திருச்சியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,150 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 43 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 72 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,722 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோய் தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் 448 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story