நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்


நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:04 PM IST (Updated: 20 Dec 2021 2:04 PM IST)
t-max-icont-min-icon

நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
மேலும், மேற்கண்ட இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். 
இந்த இணையவழி பதிவு திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story