கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை


கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை
x

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் இளையரசனேந்தல் பிர்கா போராட்டககுழு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தர்மரக்‌ஷன சமிதி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் குருராஜ், தனபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நாராயணசாமி நாயுடுவுக்கு கோவில்பட்டியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
பின்னர் உதவி கலெக்டர் சங்கரநாராயணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், விவசாய சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு பிரசாரத்திற்காக கோவில்பட்டிக்கு கடந்த 21.12.1984 அன்று வந்திருந்தார். அன்று கோவில்பட்டி பயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது இறந்தார். அந்த இடத்தில் உருவச்சிலையுடன் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க  அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை இணைக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

Next Story