கந்துவட்டி கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்


கந்துவட்டி கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2021 7:52 PM IST (Updated: 20 Dec 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்


கோவை

கந்துவட்டி கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். 

 இதில், இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் பசு மாடுடன் வந்து அளித்த மனுவில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுகிறது. 

மேலும் விதிகளை மீறி லாரிகளில் 40 மாடுகள் வரை அடைத்து கொண்டு செல்கிறார்கள். 

எனவே, விதிகளை மீறி நாட்டு மாடுகளை இறைச்சிக் காக லாரிகளில் கேரளாவுக்கு கடத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு

கோயமுத்தூர் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பினர் அளித்த மனுவில்,
கோவை பகுதியில் அரசின் அனுமதி இன்றி இயங்கும் தங்க நகை தொழிற்சாலைகளில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். வழங்கப்படுவது இல்லை. 

மேலும் அங்கு பணியாற் றும் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தஅடிப்படை வசதிகளும் இல்லை. 

எனவே அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


கந்துவட்டி கொடுமை

சித்தாபுதூர் ஹவுசிங் யூனிட் பகுதி மக்கள் அளித்த மனுவில், கோவை வி.கே.கே. மேனன் ரோடு பகுதியில் ஆதிதிராவிடர்களுக்கு 216 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. 

அதை முன்கட்டணம் இன்றி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர் அளித்த மனுவில், சூலூர் பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் இலவசமாக வீடு ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் கந்து வட்டிக் காரர்கள் கொடுமைகளை எதிர்கொள்ள முடியாமல் பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே சிறிய நிதி நிறுவனங்களின் அடாவடி பிரச்சினையில் இருந்து பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பெட்ரோல் கேனுடன் ஆட்டோ டிரைவர்

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாண்டி (வயது 48) தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க தனது கையில் பெட்ரோல் நிரப்பிய கேனு டன் வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், முன்விரோதம் காரணமாக தன்னை தாக்கியவர்கள் மீது 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 

அவரிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story