எட்டயபுரத்தில் தாய், மகனை அரிவாளால் வெட்டிய தபால் அதிகாரி கைது


எட்டயபுரத்தில் தாய், மகனை அரிவாளால் வெட்டிய தபால் அதிகாரி கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 9:19 PM IST (Updated: 20 Dec 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் தாய், மகனை அரிவாளல் வெட்டிய தபால் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்

எட்டயபுரம்:
எட்டயபுரம் பவுண்டு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 51). இவர் தலைகாட்டுப்புரத்தில் போஸ்ட் மாஸ்ட்டராக (தபால் அதிகாரி) வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (45).
இவர் அதே தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி சித்ராவிற்கு (42) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் கொடுத்துள்ளார். தற்போது பணத்தை சுமதி திருப்பி கேட்டுள்ளார்.
நேற்று காலை சித்ரா எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் பணம் திருப்பி கொடுக்க கால அவகாசம் கேட்டு புகார் அளித்துள்ளார். எட்டயபுரம் போலீசார் நாளை விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஜெயராமன் மோட்டார்சைக்கிளில் சித்ரா வீடு வழியாக சென்ற போது சித்ரா மற்றும் அவரது மகன் கனகபாரதி (21) இருவரும் ஜெயராமனிடம் தகராறு செய்து மோட்டார்சைக்கிளில் இருந்து ஜெயராமனை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதனையடுத்து ஜெயராமன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து சித்ரா மற்றும் கனகபாரதி இருவரையும் வெட்டியுள்ளார். இதில் சித்ராவிற்கு கழுத்திலும் கனகபாரதிக்கு கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.
காயமடைந்த சித்ரா கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும், கனகபாரதி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.

Next Story