காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது


காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 9:25 PM IST (Updated: 20 Dec 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே அருங்குளம் விலக்கில் எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 28 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் மாரியப்பன் (வயது 33), குளத்தூர் நடு தெருவைச் சேர்ந்த பெத்துபாண்டி மகன் பொன்னுத்துரை (36), அருங்குளம் நடு தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் அப்பனசாமி (43) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story