சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, டிச.21-
மூலப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரி, ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர்கள் ராமலிங்கம், ராஜன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஓசூர்
ஓசூரில் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹோஸ்டியா சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் தலைவர்கள் ஞானசேகரன், ரமணி சீனிவாசன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மேலும் ஹோஸ்டியா செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் வடிவேலு, முன்னாள் தலைவர் நம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். இணை தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.
பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க மத்திய அரசு உடனயாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story