காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி, டிச.21-
சூளகிரி கலைஞர் காலனி பகுதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.
சாலைமறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கீழ்த்தெருவில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 1 மாத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். மேலும் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி அவர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாததால் ஆவேசமடைந்த அந்த பகுதி மக்கள் காலிகுடங்களுடன் சூளகிரி -பேரிகை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் திடீரென நடுரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் சூளகிரி போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், உடனடியாகதண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story