ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6-வது நாளாக தொழிலாளிகள் உள்ளிருப்பு போராட்டம்


ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6-வது நாளாக தொழிலாளிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:30 PM IST (Updated: 20 Dec 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

6-வது நாளாக தொழிலாளிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அரவை பருவம் 2021-2022 தொடங்க வேண்டியும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கக்கோரியும், 50 ஆயிரம் மெகா டன் போதிய கரும்பு உள்ள நிலையில் தமிழக அரசு ஆலையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 6-வது நாளாக சர்க்கரை ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story