காட்பாடியில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.விளையாட்டு வீரர்கள் கலெக்டரிடம்கோரிக்கை மனு

காட்பாடியில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.விளையாட்டு வீரர்கள் கலெக்டரிடம்கோரிக்கை மனு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:30 PM IST (Updated: 20 Dec 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கலெக்டரிடம்கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

வேலூர்

காட்பாடியில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கலெக்டரிடம்கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் மனு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விளையாட்டு சங்க பொது செயலாளரும், ஆர்.பி.ஐ. (அத்வாலே) கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், பயிற்சியாளர் அருள்நம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் தொகுதி செயலாளர் சாரதி, சமூக ஆர்வலர் சோமு, ஆர்.பி.ஐ. கட்சியின் மாநகர செயலாளர் அறிவழகன் மற்றும் விளையாட்டு வீரர்கள் சேர்ந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திறக்க வேண்டும்

காட்பாடியில் பலஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.20 கோடி செலவில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானம் தற்போது வரை பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் காவலர் மற்றும் ராணுவத்துக்கு சேர விரும்பும் வீரர்கள் தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த முடியாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து விளையாட்டு மைதானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள பல ஏக்கர் காலி நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story