பள்ளி மாணவன் தற்கொலை


பள்ளி மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2021 9:47 PM IST (Updated: 20 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தேனி: 

அல்லிநகரம் அம்பேத்கர் நடுதெருவை சேர்ந்த சன்னாசி மகன் நாகராஜ் (வயது 14). தேனியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சன்னாசி தன் மகன் நாகராஜை பள்ளிக்கு அழைத்து சென்றார். அங்கு 20-ந்தேதியில் இருந்து நாகராஜ் பள்ளிக்கு வருவான் என்று தலைமை ஆசிரியரிடம் அவர் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு நாகராஜ் தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story