தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் பரதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கார்த்திகேயன், சத்தியசீலன், இணை செயலாளர்கள் வெற்றிசெல்வி, செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் அமிர்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொடக்க கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும். வாய்மொழி உத்தரவை கைவிட வேண்டும். அரசாணைப்படி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
பணியாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் கால தாமதமின்றி வழங்கவேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நகர கூட்டுறவு ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு தொடக்க கூட்டுறவு சங்க விற்பனையாளருக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story