சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:05 PM IST (Updated: 20 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

முருகபவனம்:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலையில் 108 கலச முதற்கால யாக பூஜைகள், ருத்ரயாகம் நடைபெற்றது. 
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் 2-ம் கால யாக பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமி நடராஜருக்கு 108 கலச அபிஷேகம், புஷ்ப அலங்காரம், பஞ்சமுக நடன தீபாராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டு, நேற்று காலை 8.30 மணி அளவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கோமாதாவுக்கு சிறப்பு பூஜை செய்து, ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை ஆனந்த நடராஜர் சன்னதியில் திருவாதிரை திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகவேள்வி நடந்தது. அதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகரின் 51 பதிகங்களும் பாடப்பட்டு, ஆனந்த நடராஜருக்கு மஞ்சள், திருநீறு, பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆனந்த நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. 
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. 

Next Story