மினி லாரி கவிழ்ந்தது


மினி லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 20 Dec 2021 10:24 PM IST (Updated: 20 Dec 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே நாய் குறுக்கே பாய்ந்து மினி லாரி கவிழ்ந்தது.

தேவகோட்டை, 
திருச்சி-ராமேசுவரம் பை-பாஸ் தேவகோட்டை புறவழிச் சாலையில் உதையாச்சி என்ற இடம் அருகில் திருச்சியில் இருந்து தொண்டிக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியின் வேகத்தை கட்டுப்படுத்தியபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காய்கறிகள் அனைத்தும் சிதறின. யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவல் அறிந்து மீட்பு பணி மேற்கொண்டனர். இதுகுறித்து தேவ கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Next Story