கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 10:32 PM IST (Updated: 20 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகியவற்றில் தகுதியான பயனாளிகளை விரைந்து தேர்வு செய்து, தகுதியற்ற பயனாளிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான பணிகள் முழுமையாக முடிவடைவதற்குள் புதிதாக பயிர்க்கடன் வழங்க பணியாளர்களை நிர்பந்திக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story