தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி


தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Dec 2021 11:00 PM IST (Updated: 20 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 
பாத தரிசன விழா 
திருவாரூர் தியாகராஜர் கோவில், சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. 
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா என ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தியாகராஜர் பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது.
மகா அபிஷேகம்
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடந்தது. 
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
நீடாமங்கலம் 
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா  நடைபெற்றது. இதையொட்டி நடராஜப்பெருமான், சிவகாமிஅம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிஹரன், செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் சாமி வீதி உலாவும், தேவாரம், திருவாசகம் முற்றோதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. 
வலங்கைமான்
வலங்கைமானில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் ஆவூர் பசுபதீஸ்வரர், வைத்தீஸ்வரர், காசி விசுவநாதர், அருணாச்சலேஸ்வரர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்,  அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. 
குடவாசல் 
குடவாசல் அருகே திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அம்மன், நடராஜப்பெருமானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பி்ன்னர் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மதியம் 3 மணியளவில் தீர்த்தவாரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Next Story