தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
காட்பாடி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் காட்பாடியில் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி நகர் ரவுண்டானாவில் நேற்று நடந்தது. வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்பாபு, செயற்பொறியாளர்கள் சாந்தி, பரிமளா மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆக்சிலியம் கல்லூரியில் மாணவிகளுக்கான மின்சார சிக்கனம் குறித்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story