பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 11:04 PM IST (Updated: 20 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள க.தொழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விருத்தாசலம் வந்தார். பின்ன அவர், சொந்த ஊருக்கு செல்வதற்காக விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு வந்த பஸ்சில் ஏறினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் 2 பேர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். 

வலைவீச்சு

இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story