தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கரூர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை போக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட கருணை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். தை பொங்கல் திருநாளுக்கு நியாய விலைக்கடைகளில் வழங்கும் இலவச பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் செல்வரத்தினம், கவுரவ செயலாளர் பழனிசாமி, பொருளாளர் பிரபாகரன் உள்பட ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story