சிறு-குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் போராட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 20 Dec 2021 11:57 PM IST (Updated: 20 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

சிறு-குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

கரூர்
சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய தொழில் அமைப்புகளின் கூட்டமைப்புடன் கரூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் மற்றும் தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் சிவக்குமார், தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சசிக்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுவினை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Next Story