பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கரூர்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற 16 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரமும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story