ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2021 12:42 AM IST (Updated: 21 Dec 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யு.சி. பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஏ.ஐ.டி.யு.சி. பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. துவான்ஷா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் சமுத்திரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன், துணைச்செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். வருவாய் துறை அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று பட்டாசு தொழிற்சாலையை உடனடியாக திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வருவாய் துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Next Story