சிவகாசியில் நாளை மின்தடை


சிவகாசியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 21 Dec 2021 12:47 AM IST (Updated: 21 Dec 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகாசி, 
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாரைப்பட்டி, சிவகாசி நகரம், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கமாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, கண்ணா நகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேருரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரோடு, அண்ணாகாலனி, லிங்கபுரம் காலனி, ராஜீவ்காந்தி நகர்,  அம்மன்நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசநகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராம லிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின்சார வாரிய பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story