காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
தொடக்க கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்,
தொடக்க கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க வங்கிகள் அனைத்து பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
விவசாய கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை சரியாக நடத்த வேண்டும். மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். அரசாணைப்படி பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணைஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்க வேண்டும். வருமானவரித்துறையின் பிடித்தம் ரத்து செய்யப்படவேண்டும்.
காலிப்பணியிடங்கள்
பணியாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்கப்படுவதுடன் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணைப்படி சங்கப்பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் வரன்முறைப்படுத்த வேண்டும்.
சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகை ஏலத்தில் ஏற்படும் நஷ்டத்தை நஷ்டக் கணக்கில் கொண்டு செல்ல வேண்டும். இறுதி தணிக்கை அறிக்கையை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும். கொரோனா காலங்களில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட விலையில்லா பொருட்களின் விளிம்புத் தொகை வழங்க வேண்டும். ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராகவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நடராஜன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story