மின்மாற்றியில் உள்ள ரூ.85 ஆயிரம் செம்பு கம்பிகள் திருட்டு
மின்மாற்றியில் உள்ள ரூ.85 ஆயிரம் செம்பு கம்பிகள் திருட்டு போனது
அன்னவாசல்
ஆலத்தூர் குறிச்சிப்பட்டி பகுதியில் மின்சாரம் இல்லை என்று நுகர்வோர் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள மின் மாற்றியை இயக்குவதற்காக மின்வாரிய ஊழியர் சிவலிங்கம் அங்கு சென்றார். அப்போது மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த சில மின்சாதன பொருட்கள் கீழே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இலுப்பூர் உதவி மின் பொறியாளர் சாம்ஜெபமணிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது மின்சாரத்தை நிறுத்தி விட்டு அதில் இருந்த ரூ.85 ஆயிரம் செம்பு கம்பிகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் சாம்ஜெபமணி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலே திருடனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story