நகைக்கடையில் தங்க கம்மல் திருட்டு


நகைக்கடையில் தங்க கம்மல் திருட்டு
x
தினத்தந்தி 21 Dec 2021 1:55 AM IST (Updated: 21 Dec 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடையில் தங்க கம்மல் திருடப்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சோமு நடராஜன். இவர், கீழ ராஜவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் இவரது கடையில் நகைகளை வாங்குவது போல வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஒரு பவுன் எடையுள்ள தங்க கம்மலை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக சோமுநடராஜன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், 2 பேரின் அடையாளம் தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story