மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; அஞ்சல் ஊழியர் பலி


மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; அஞ்சல் ஊழியர் பலி
x
தினத்தந்தி 21 Dec 2021 2:01 AM IST (Updated: 21 Dec 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாக்குடி அருகே மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் அஞ்சல் ஊழியர் இறந்தார்.

முக்கூடல்:
முக்கூடலை அடுத்த சிங்கம்பாறை பத்திநாதர் தெருவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவர் அம்பை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டு அம்பை ெரயில் நிலையத்துக்கு வந்திறங்கினார். அங்கிருந்து சிங்கம்பாறையை சேர்ந்த பன்னீர் என்பவரது ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பாப்பாக்குடி அருகே வந்தபோது ரோட்டில் படுத்துக் கிடந்த மாடு திடீரென எழுந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக மாட்டின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஆண்ட்ரூஸை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆண்ட்ரூஸ் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பன்னீர், முக்கூடல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story