வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
மதுரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலியானார். அவர் தூக்கத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை,
மதுரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலியானார். அவர் தூக்கத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
மதுரை ஆழ்வார்புரம் முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி மகிழம்மாள் (வயது 65). கணவர் உயிரிழந்த நிலையில் அதே பகுதியில் வீடு ஒன்றில் மகிழம்மாள் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் சுவர் ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கி மூதாட்டி மகிழம்மாள் உயிரிழந்தார்.
சோகம்
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து தூக்கத்திலேயே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
=====
Related Tags :
Next Story