தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். வாய்மொழி உத்தரவை கைவிட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் விரைவில் வழங்க வேண்டும். ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
Related Tags :
Next Story