அரசு பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது
அரசு பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் இடிக்கும் பணி தினத்தந்தி செய்தி காரணமாக தொடங்கியது.
கபிஸ்தலம்;
அரசு பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் இடிக்கும் பணி தினத்தந்தி செய்தி காரணமாக தொடங்கியது.
அரசு மேல்நிலைப்பள்ளி
சுவாமிமலையில் பழமை வாய்ந்த அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. மேலும் கட்டிடத்தின் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டது. இது குறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது.
இடிக்கும் பணி
இதைத்தொடர்ந்து சேதமடைந்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பகுதிகளை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இதில் மேலும் சில கட்டிடத்தில் கான்கிரீட் சிமெண்டு காரைகள் உடைந்து காணப்படுகிறது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story