ஆத்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது
ஆத்தூர்அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்,
10-ம் வகுப்பு மாணவி
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் மனைவி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகளுக்கு 15 வயது ஆகிறது. 10-ம் வகுப்பு மாணவியான அவளை அடிக்கடி மிரட்டி அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி எனது கணவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் எனது மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று என்னையும், எனது மகளையும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கைது
இதையடுத்து மகளை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story