விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சங்கரன்கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கூலி உயர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இதுவரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story