ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 11 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் நேற்று நடந்தது. 11 காலியிடங்களுக்கு 175 பேர் விண்ணப்பித்திருந்ததில், 159 ஆண்களும், 16 பெண்களும் வந்தனர். அவர்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் முதலில் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கான உடற்தகுதி தேர்வு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது. ஆண்களுக்கு அவர்களின் உயரம், எடை சரிபார்க்கப்பட்டது. மார்பளவு அளவிடப்பட்டது. 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதலும் நடந்தது. பெண்களுக்கு உயரம், எடை சரிபார்க்கப்பட்டு, ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதலும் நடந்தது. ஊர்க்காவல்படை ஆட்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராம், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story