கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Dec 2021 3:44 AM IST (Updated: 21 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய ஆத்துகுறிச்சி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வீரனார் கோவிலை ஒரு வகையறாவை சார்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது அதே ஊரில் வேறுவகையறாவை சேர்ந்தவர் வீரனார் கோவிலையும், கோவில் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரிய ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் மேலதிகாரியுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலை மீட்டுத்தர வேண்டும். கோவில் இடத்தை வேறுவகையறாவை ேசர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, என்றனர்.

Next Story