கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய வழக்கில் மனைவிக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது


கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய வழக்கில் மனைவிக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 2:22 PM IST (Updated: 21 Dec 2021 2:22 PM IST)
t-max-icont-min-icon

கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய வழக்கில் மனைவிக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவருடைய மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தகுமார், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடைய அவர், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

மேலும் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் மனைவியை அடிக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, அந்த இரும்பு கம்பியை பறித்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஆனந்தகுமாரின் கழுத்தை வயரால் இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் தனது தம்பி முருகனிடம் தெரிவித்தார். அவர் தனது நண்பருடன் அங்கு வந்து ஆனந்தகுமார் தற்கொலை செய்து கொண்டதுபோல் அனைவரையும் நம்ப வைக்க அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு கணவர் கையை வெட்டியதாக கூறி தனலட்சுமி அக்கம் பக்கத்தினரால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில் அவர், கணவரை கொன்று தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

இந்த வழக்கில் தனலட்சுமி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய தம்பி முருகன் (30), அவருடைய நண்பர் ஹேமந்த்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story