அனைத்து கடைகளிலும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி: தொழிலாளர் உதவி ஆணையர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் வலியுறுத்தி உள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இருக்கை வசதி
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஊழியர்கள் எந்த இடத்திலும் பணி செய்யும் போது அல்லது ஓய்வின் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமருவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பணியாளர்களின் கால்விரல்களில் ஏற்படும் அசவுகரியங்கள் தடுக்கப்படும்.
நடவடிக்கை
எனவே ஊழியர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை வசதி ஏற்படுத்தும் சட்ட திருத்தத்தை, அனைத்து தொழில் நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த சட்ட திருத்தத்தை கடைபிடிக்க தவறும் நிறுவன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
----------
Related Tags :
Next Story