6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்


6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Dec 2021 5:49 PM IST (Updated: 21 Dec 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றிய வந்த 6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி குடியாத்தம் தாலுகா வளத்தூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகிருஷ்ணன் குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணியாற்றி வரும் வாசுகி மாவட்ட கலெக்டர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றி வரும் விநாயகமூர்த்தி அணைக்கட்டு உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணியாற்றி வந்த சுகந்தி வளத்தூர் உள் வட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த சவுந்தரராஜன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த ரகுராமன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கான உத்தரவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார்.

Next Story