கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நீடாமங்கலம்:-
கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கரும்பு சாகுபடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர், பெரியகோட்டை, கோவில்வெண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் சாகுபடி செய்துள்ள கரும்புகள் அதிக அளவில் சேதம் அடைந்தன.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 5 நாட்களுக்கு முன்பு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்து ரூ.50 ஆக விலை சரிந்தது. இந்த ஆண்டு தமிழக அரசு ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சிரமத்தில் விவசாயிகள்
இதனால் கரும்பின் தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மழை ஏற்படுத்திய பாதிப்பால் கரும்பு விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். நீடாமங்கலம் பகுதியில் தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் அறுவடைக்கான ஆயத்த பணிகளில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story