மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுத்தி உளளார்.
மன்னார்குடி:-
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுத்தி உளளார்.
இல்லம் தேடி கல்வி திட்டம்
தமிழகத்தில் விழுப்புரம், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு தொடக்க, நடுநிலை மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முதல் மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தன்னார்வலர்கள் தேர்வு நடந்தது. இதில் கணினி தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
பயிற்சி முகாம்
அதன்படி மன்னார்குடி கோபாலசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கபாபு, முரளி, சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், ‘தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை தன்னார்வலர்களை நம்பி ஒப்படைக்க இருக்கிறது. எனவே மிகுந்த கவனமுடனும், பொறுப்புணர்வுடன் மாணவர்களின் உளவியலை உள் வாங்கி அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தன்னார்வலர்கள் உதவ வேண்டும்’ என்றார். இந்த பயிற்சியில் தொடக்க நிலையில் 22 தன்னார்வலர்களும், உயர்நிலையில் 31 தன்னார்வலர்களும் பங்கு பெற்றனர்.
பயிற்சி
முகாமில் குழந்தைகளின் கல்வி, மனமகிழ்ச்சி செயல்பாடுகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தாளர்கள் இளங்கோவன், சரவணன், சுகன்யா ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் மாவட்ட கருத்தாளர் ஜெயசீலி, ஆசிரியர் பயிற்றுனர்கள் காளிமுத்து, கலைச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story