கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி ஊராட்சியை சேர்ந்த கீழ்கருமனூர் கண்டிகை, தலையாரிபாளையம், சூளைமேனி, கயடை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி காளிதாஸ் தலைமை தாங்கினார்.
டாக்டர் ஜாகீர் அப்பாஸ், கால்நடை ஆய்வாளர்கள் சுப்பிரமணி, ஆனந்தி, திவாகர், ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பான முறையில் கால்நடைகளை பராமரிக்கும் பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுப்புலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அமுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story