மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்டிக்கடைக்காரர் பலி
குலசகேரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்டிக்கடைக்காரர் பலியானார்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலாஜி (வயது 40). வீடு அருகே, அவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குலசேகரன்பட்டினத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடன்குடிக்கு சென்று கொண்டிருந்தார். குலசேகரன்பட்டினம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் பாலாஜியின் மோட்டார்சைக்கிள் பின் பகுதியில் மோதியது. இதில் பாலாஜி மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் ஜஸ்டின் மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story