ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2021 8:07 PM IST (Updated: 21 Dec 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஆட்டோ டிரைவர் வயிற்றுவலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் சந்தியா (28) என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் சுரேஷ் கடந்த ஒரு ஆண்டு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு அதற்காக சரியாக சிகிச்சை எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் கூடப்பாக்கம் பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சந்தியா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story